2009-11-24 15:45:10

ஆஸ்திரேலியாவில் அரசால் அமைக்கப்பட்ட அவை,  மனச் சான்றின் சுதந்திரத்தைத் தன் பட்டியலில் கொண்டிருக்கவில்லை - கர்தினால் ஜார்ஜ் பெல்


நவ.24,2009 ஆஸ்திரேலியாவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கென அரசால் அமைக்கப்பட்ட அவை, மத மற்றும் மனச் சான்றின் சுதந்திரத்தைத் தன் பட்டியலில் கொண்டிருக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் அந்நாட்டு கர்தினால் ஜார்ஜ் பெல்.

ஒரே பாலின உறவுகள், கருத்திசு சோதனை, கருகலைத்தல் போன்ற விவகாரங்களில் மத தீவிரவாதப் போக்குகள் பலவந்தமாக நுழைய விரும்புவதாக இவ்வவையின் அதிகாரி Tom Calma குற்றஞ்சாட்டியுள்ளதையும் சுட்டிக்காட்டிய கர்தினால், மத சுதந்திரத்தை மனித உரிமையாக ஏற்றுக் கொள்ளாத ஒரு போக்கு வளர்ந்து வருவதாகவும் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் மனித உரிமைகளை மேம்படுத்த அரசால் அமைக்கப்பட்ட ஓர் அவை, மத சுதந்திரத்தை மனித உரிமையாக நோக்காதது அதிர்ச்சி தருவதாக உள்ளது எனவும் கவலையை வெளியிட்டார் கர்தினால் பெல்







All the contents on this site are copyrighted ©.