2009-11-23 17:12:19

திருப்பீடச் செயலரின் கடிதம் சீனாவில் வரவேற்பைப் பெற்றுள்ளது


நவ.23,2009 குருக்கள் ஆண்டையொட்டி சீனக்குருக்களுக்கென திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள செய்தி பெரும்பான்மை சீனக் குருக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளதாக சீனக்குரு ஒருவர் தெரிவித்தார்.

திருத்தந்தைக்கு விசுவாசமாக இருப்பதால் மறைந்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சீனக் கத்தோலிக்கத் திருச்சபையின் குருக்களும் அரசு ஆதரவு பெற்ற சீனக் கிறிஸ்தவ சபையின் குருக்களுள் பெரும்பான்மையினோரும் திருப்பீடச் செயலரின் சிறப்பு செய்தியை வரவேற்றுள்ளதாக சீனக்குரு ஜான் பாப்பிஸ்ட் கூறினார்.

சீனாவின் குருக்கள் அனைவரும் கர்தினால் பெர்த்தோனேயின் கடிதங்களை மிக ஆழமாக ஊன்றி வாசித்து வருவதாக அவர் கூறினார்.

குருக்களுக்கான மிகச்சிறந்த வழிகாட்டியாகக் கர்தினாலின் கடிதம் உள்ளது என, சீன அரசின்கீழ் இயங்கும் கத்தோலிக்கச் சபையின் குரு ஜான் லி ஹாங்வெயும், புதிய குருக்களுக்கான பயிற்சியில் ஆயர்கள் அக்கறையுடன் செயல்பட வேண்டுமென்ற கர்தினால் பெர்த்தோனேயின் விண்ணப்பம் வரவேற்கப்பட வேம்டியது என அதே சபை குரு பவுல் பாய் சுங்லாங்கும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 








All the contents on this site are copyrighted ©.