2009-11-21 16:53:50

கர்நாடகவில் பல்வேறு மதங்களைச் சார்ந்த இளையோர் தாக்கப்பட்டிருப்பதற்கு கத்தோலிக்கத் திருச்சபை வன்மையான கண்டனம்


நவ.21,2009 இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு மதங்களைச் சார்ந்த இளையோரை இந்துத்துவ தீவிரவாதிகள் தாக்கியிருப்பது குறித்த தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது அம்மாநில கத்தோலிக்கத் திருச்சபை.

கர்நாடக கத்தோலிக்க ஆயர் பேரவை இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு மதங்களைச் சார்ந்த சிறுவரும் சிறுமியரும் நல்லதொரு உறவைக் கொண்டிருப்பதில் தவறு என்ன? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

கர்நாடகாவின் இந்துத்துவ ஆதரவு கொண்ட அரசு, காலத்துக்கு ஒத்து வராத தங்களின் சொந்த அறநெறிக் கொள்கைகளை மற்றவர் மீது சுமத்துவதற்குத் தாக்குபவர்களைத் தவறாக வழி நடத்துகின்றது என்று அவ்வறிக்கை அரசைக் குறை கூறியுள்ளது.

இத்தகைய தாக்குதல்கள் மக்களை அச்சத்தில் வைத்துள்ளது என்றும் அவ்வறிக்கை கூறியுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் இத்தகைய 12 தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன மற்றும் 56 ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஏறக்குறைய 5 கோடியே 30 இலட்சம் மக்களைக் கொண்ட கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் 2 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர். அங்கு சுமார் 84 விழுக்காடு இந்துக்களும் சுமார் 12 விழுக்காடு முஸ்லீம்களும் இருக்கின்றனர்.

 








All the contents on this site are copyrighted ©.