2009-11-21 16:55:39

இலங்கையில் சிறப்பு தடுப்பு முகாம்களிலுள்ள அகதிகள், வருகிற டிசம்பரிலிருந்து சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நவ.21,2009 இலங்கையில் தமிழ் விடுதலைப் புலிகளுடன் இடம் பெற்ற போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசின் சிறப்பு தடுப்பு முகாம்களில் வாழ்ந்து வரும் அகதிகள், வருகிற டிசம்பரிலிருந்து சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்கள் வருகிற டிசம்பர் முதலாம் தேதியிலிருந்து சுதந்திரமான நடமாட்டத்திற்காக திறந்து விடப்படும் என அரசின் சார்பில், ஜனாதிபதியின் முக்கிய ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.

மிகப்பெரிய மானிக் பாம் Menik Farm தடுப்பு முகாமை பார்வையிட்ட பசில் ராஜபக்ச, முகாம்களிலுள்ள முள்கம்பிகள் தகர்க்கப்பட்டு அகதிகள் தங்களது குடும்பத்தினரையும் நண்பர்களையும் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இடம்பெயர்ந்துள்ள மக்கள், வருகிற ஜனவரி 31 ஆம் தேதிக்கு முன்னர், மீளக்குடியேற்றப்படுவர் என்றும் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.

இம்முகாம்களில் இன்னும் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் அகதிகள் இருக்கின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.