2009-11-21 16:22:43

இன்றைய புனிதர்: புனித செசிலியா


இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்துவை அறியாத ஒரு குடும்பத்தில் பிறந்தார் புனித செசிலியா. கிறிஸ்துவை அறிந்தபிறகு, தன் வாழ்வைக் கிறிஸ்துவுக்காக கன்னிமையில் கழிக்க விரும்பினார். அவரது எண்ணங்களுக்கு எதிராக, பெற்றோர் இவரை வலேரியன் என்ற பிரபுவுக்கு மணமுடித்தனர். இவரது செபத்தாலும், நடத்தையாலும் வலேரியனும் அவரது சகோதரர் திபூர்சியுசும் திருமறையைத் தழுவினர், மறை சாட்சிகளாய் இறந்தனர். செசிலியாவும் கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்ததால், பல சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப் பட்டார். இறுதியில், இறைவனின் புகழைப் பாடிய வண்ணம் உயிர் துறந்தார். இவரை பக்தி இசைக்குப் பாதுகாவலாரகப் போற்றுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.