2009-11-20 17:35:00

டிஜிட்டல் உலகில் வாழும் சிறாரின் உரிமைகள் மதிக்கப்படுவதற்கும் அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதற்கும் கத்தோலிக்கச் சமூகத் தொடர்பாளர்கள் கருத்தாய்ச் செயல்பட அழைப்பு


நவ.20,2009 டிஜிட்டல் உலகில் வாழும் சிறாரின் உரிமைகள் மதிக்கப்படுவதற்கும் அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதற்கும் கத்தோலிக்கச் சமூகத் தொடர்பாளர்களும் ஊடகவியலாரும் கருத்தாய்ச் செயல்பட வேண்டுமென்று உலக மாநாடு ஒன்றில் வலியுறுத்தப்ட்டது.
சிறாரின் உரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டதன் இருபதாம் ஆண்டை முன்னிட்டு, தாய்லாந்தின் சியாங் மாய் Chiang Mai நகரில் சிக்னிஸ் SIGNIS என்ற உலக கத்தோலிக்க ஊடகத்துறை அமைப்பு அண்மையில் நடத்திய உலக மாநாட்டில் இவ்வாறு கூறப்பட்டது.
“அமைதிக் கலாச்சாரத்துக்காக ஊடகம்-நாளைய நம்பிக்கையாகிய சிறாரின் உரிமைகள்
” என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டில் நூற்றுக்கணக்கான சிறாரும் கலந்து கொண்டனர்.
எல்லா நிலைகளிலும் அனைத்து வயதுடைய சிறார் கல்வி கற்பதற்கும், சமூகத் தொடர்பு சாதனங்களை விவேகத்துடனும் படைப்பாற்றலுடனும் பயன்படுத்துவதற்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் இம்மாநாட்டில் வலியுறுத்தப்ட்டது. இந்த ஆண்டு, நவம்பர் 20ம் தேதி இவ்வெள்ளியன்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம் சிறாரின் உரிமைகள் குறித்த அறிவிப்பை அங்கீகரித்ததன் 50ம் ஆண்டும், சிறாரின் உரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டதன் இருபதாம் ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.