2009-11-20 17:33:30

செவித்திறன் இழந்தோரின் அடிப்படை உரிமைகளும் மாண்பும் மதிக்கப்பட்டு அவர்கள் சமுதாயத்தில் முழுவதுமாக ஒருங்கிணைக்கப்பட திருத்தந்தை அழைப்பு


நவ.20,2009 செவித்திறன் இழந்தோரின் அடிப்படை உரிமைகளும் மாண்பும் மதிக்கப்பட்டு அவர்கள் சமுதாயத்தில் முழுவதுமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வெள்ளியன்று கேட்டுக் கொண்டார்.
முற்சார்பும் பாகுபாடும் கொண்ட கலாச்சாரங்கள் சமுதாயத்தில் ஒருபொழுதும் இருக்க முடியாது என்று செவித்திறன் இழந்தோருக்கெனச் செயல்படும் பல கழகங்கள் நிரூபித்துள்ளன என்றும் திருத்தந்தை கூறினார்.
திருப்பீடத்தின் நலவாழ்வுத்துறை நடத்தும் மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்ளும் சுமார் 400 பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய அவர், செவித்திறன் இழந்தோரின் அடிப்படை உரிமைகளும் மாண்பும் மதிக்கப்படுவதற்கு அழைப்பு விடுத்தார்.
உடல் ரீதியாக மட்டுமல்லாமல் ஆவியின் குரலுக்கு மந்தமாக இருக்கும் செவிட்டுத்தன்மை குறித்தும் கூறினார் அவர்.
செவித்திறன் இழந்தோர் நற்செய்தியைப் பெறுபவர்கள் மட்டுமல்லாமல் அதனைத் தங்களது அன்றாட வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுமாறும் திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
எப்பத்தா அதாவது திறக்கப்படு என்ற தலைப்பில் திருச்சபையின் வாழ்வில் செவித்திறன் இழந்தோருக்கென நடைபெறும் இம்மாநாடு நவம்பர் 21ம் தேதி நிறைவு பெறும். உலகில் செவித்திறன் இழந்தோரின் எண்ணிக்கை 5 கோடியே 90 இலட்சம் ஆகும்.







All the contents on this site are copyrighted ©.