2009-11-20 17:34:02

AIDS நோயாளிகளுக்கு திருச்சபை ஆற்றும் பணி மனிதமாண்பை மதிப்பதாய் இருக்கின்றது - இயேசு சபை குரு


நவ.20,2009 ஆப்பிரிக்காவில் AIDS நோயாளிகளுக்கும், HIV நோய்க் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்குமென கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றும் பணியானது ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் மாண்பையும் மதிப்பதாய், தேவையில் இருப்போருடன் தோழமை உணர்வைக் காட்டுவதாய் இருக்கின்றது என்று இயேசுசபை மாநில அதிபர் அருட்திரு Fratern Masawe கூறினார்.
டிசம்பர் முதல் தேதி கடைபிடிக்கப்படும் உலக AIDS நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட ஆப்பிரிக்க மற்றும் மடகாஸ்கர் இயேசுசபைத் தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர் அருட்திரு Masawe , இவ்வாறு கூறியுள்ளார்.
25 ஆண்டுகளுக்கு முன்னர், முதன் முறையாக ஆப்பிரிக்காவில் AIDS நோய் பாதிக்கத் தொடங்கிய போது, மிகச் சிலரே அது குறித்து அக்கறை செலுத்தினர் என்றும் அக்குரு கூறியுள்ளார். ஐ.நா.வின் கணிப்புப்படி, உலகில் வாழும் 3 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட AIDS நோய் மக்களில் மூன்றில் இரு பகுதியினர் ஆப்பிரிக்காவின் சஹாராவையடுத்த பகுதியில் வாழ்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.