2009-11-19 15:34:58

மாஸ்கோவில் நடைபெறும் சாலைப் பாதுகாப்பு குறித்த கூட்டத்தில் பேராயர் மர்கேத்தோ


நவ.19,2009 மனிதர்களிடையேயும், கலாச்சாரங்களுக்கிடையேயும் ஓர் இணைப்பை ஏற்படுத்தி, மனிதர்களுக்கிடையேயான ஒன்றிணைந்த நடவடிக்கைகளுக்கும், பேச்சு வார்த்தைகளுக்கும் ஊக்கமளிக்கும் சாலைப் போக்குவரத்தின் பாதுகாப்பு நிலைகள் குறித்து உலக அளவில் சிந்திக்க வேண்டியது அவசியமான ஒன்று என்றார், திருப்பீட அதிகாரி பேராயர் அகோஸ்தினோ மர்கெத்தோ.
ரஷ்யாவின் மாஸ்கோவில் இவ்வியாழனும், வெள்ளியும் நடைபெறும் சாலைப் பாதுகாப்பு குறித்த முதல் உலக அளவிலான அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய, குடிஎற்றதாரருக்கான திருப்பீட அவையின் செயலர் பேராயர் மர்கெத்தோ, சாலைப் போக்குவரத்தை மனித குல முன்னேற்றத்திற்கான நல்லதொரு படியாக நோக்கும் திருச்சபை, அதனோடு தொடர்புடைய ஒழுக்க ரீதி கடமைகளையும் வலியுறுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.
சாலை விதிகளை மதிப்பதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்த பேராயர், சலிகளோடு தொடர்புடைய சாலையோரச் சிறார், சாலையோரப் பெண்கள், வீடற்று சாலை ஓரங்களில் வாழ்வோர் குறித்த அக்கறைக்கும் அழைப்பு விடுத்தார். "சாலை தொடர்புடைய மெய்ப்புப் பணி அக்கறைக்கான வழி காட்டுதல்கள்" என்ற தலைப்பில் 2007ஆம் ஆண்டே திருப்பீடம் எடு ஒன்று வெளியிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார் திருப்பீட அதிகாரி பேராயர் மர்கேத்தோ.







All the contents on this site are copyrighted ©.