2009-11-19 15:35:56

மரண தண்டனைக்கெதிராக உலகம் இணைகிறது 


நவ.19,2009 நவம்பர் 30ஆம் தேதியன்று உலகின் ஏறத்தாழ 1000 பெருநகரங்களில் உள்ள நினைவுச் சின்னங்கள் ஒளிவெள்ளத்தில் நிரப்பப்படும். உலகின் பல நாடுகளில் இன்றும் பின்பற்றப்படும் மரண தண்டனையை எதிர்த்து "உயிரின்றி நீதியில்லை" என்ற கருத்தை பரப்பும் நோக்கத்தோடு Sant Egidio குழுமம் ஆரம்பித்திருக்கும்  முயற்சிக்கு ஆதரவாக இந்நிகழ்ச்சி நடைபெறும் என்று செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. ஐ.நா. போது அவையில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானகள் எல்லா நாடுகளிலும் மரணதண்டனை நிறுத்தப்பட வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1786ஆம் ஆண்டு டஸ்கனி என்ற நகரில் நவம்பர் 30அன்று மரணதண்டனை நிறுத்தப்பட்டதை நினைவு கூறும் வகையில் இந்த நாலா அனுசரிக்கப்படுகிறது என்றும், 2008ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதியன்று 1000 பெருநகரங்களில் நினைவுச்சின்னங்கள் ஒளிமயமாக்கப்பட்டன என்றும் செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரோமை நகரில் Colosseum மும், பார்சலோனா நகரில் பேராலய வளாகமும் ஒளிமயமாக்கப்படும்.







All the contents on this site are copyrighted ©.