2009-11-19 15:35:40

காசா பகுதியில் இழைக்கப்படும் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் -  உலகத் திருச்சபைகளின் குழு வேண்டுகோள்


நவ.19,2009 காசா பகுதியில் இஸ்ராயலருக்கும் பாலஸ்தீனியருக்கும் இடையே நடக்கும் சண்டைகளில் இழைக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டுமென உலகத் திருச்சபைகளின் குழு (WCC) ஐ. நா. சபையின் தலைமைச் செயலரைக் கேட்டுக்கொண்டுள்ளது. உலகத் திருச்சபைகளின் குழுவிற்குப் பொதுச் செயலராக இருக்கும் Rev Dr Samuel Kobia இவ்விரு நாடுகளும் பல ஆண்டுகளாய் ஈடுபட்டுவரும் போரில் இழைக்கப்பட்ட குற்றங்களை எந்த வித நிபந்தனைகளுமின்றி பட்டியலிட்டு உலக மன்றத்தில் அறிவிப்பதற்கு ஐ.நா.வின் தலைமைச் செயலர் பான் கி மூன் இரு நாடுகளையும் நிர்ப்பந்திக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். காசா போரைக் குறித்து உண்மைகளை அறிய ஐ.நா அனுப்பிய குழு இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் இப்போரில் ஈடுபட்டுள்ள இரு நாடுகளுமே போர், மனித உரிமைகள் ஆகிய இருவிதங்களிலும் பல்வேறு குற்றங்கள் புரிந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.