2009-11-19 15:33:18

அமெரிக்கா ஆயர் பேரவைக் கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி


நவ.19,2009 இத்திங்கள் முதல் வியாழன் வரை நடைபெற்ற அமெரிக்கா ஆயர் பேரவையின் வருடாந்திர கூட்டத்திற்கு திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட் தன் ஆசீரையும், வாழ்த்துக்களையும் அனுப்பியுள்ளார். திருப்பீடச் செயலர் கர்தினால் டார்சிஸியோ பெர்தொனே திருத்தந்தையின் வாழ்த்துக்களை அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கானத் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பியெத்ரோ சாம்பிக்கு (Pietro Sambi) அனுப்பியுள்ளார். இவ்வாண்டின் கூட்டத்தில் திருமண உறவை உறுதிபடுத்துதல், அருட்சாதன அடிப்படையில் அமையும் வாழ்வு, குருத்துவ, துறவற வாழ்வுக்கான அழைப்பு, மனித உயிருக்கான மதிப்பு, கலாச்சார வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளுதல் ஆகிய ஐந்து கருத்துக்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இவ்வாண்டு நடக்கும் கூட்டத்தின் பயனாக, திருமண வாழ்வுகுறித்தும், குழந்தைகள் பெறுவது குறித்தும் ஆயர்களின் பரிந்துரைகள் அடங்கிய சுற்று மடல் ஒன்று வெளியிடப் பட்டுள்ளது என்றும் இந்த சுற்று மடல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.