2009-11-18 16:03:36

வாரணாசியில் கிறிஸ்த் பக்தா (Khrist Bakta) மாநாடு


நவ.18,2009 இந்தியாவில் ஹிந்துக்களின் முக்கிய திருத்தலமாகக் கருதப்படும்  வாரணாசியில் அண்மையில் கிறிஸ்த் பக்தா (Khrist Bakta) என்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், பல்வேறு சமயங்களைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். திருமுழுக்கு பெறாவிடினும், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டுள்ள பல ஆயிரம் பேரின் விசுவாசத்தை வளர்க்க மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி இதுவென்று இவ்வியக்கத்தை ஆரம்பித்த அருட்தந்தை அனில் தேவ் கூறினார். கிறிஸ்துவை அறிந்து கொள்ள தனி நபர் எடுக்கும் முயற்சிகளுக்கு அவர்கள் குடும்பங்களிலிருந்தும் சமூகத்திலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தாலும் இம்மக்கள் மதம் சார்ந்த செயல்பாடுகளில் மேலோட்டமான போக்கை மாற்றி, கிறிஸ்துவில் ஆழமான உண்மைகளை இந்த முயற்சியின் வழியாக வாழ்வில் கண்டு வருவது இந்தப் பணியில்  ஈடுபட்டுள்ள தனக்கும், உடன் உழைப்பாளர்களுக்கும் நிறைவைத் தருவதாகக் கூறினார் அருட்தந்தை தேவ். ஹிந்து, இஸ்லாம், சீக்கிய மதங்களைச் சார்ந்த பல தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, சர்வ சமய வழிபாடுகளில் பங்கேற்றனர் என்றும், மாநாட்டில் கலந்து கொண்ட பல நூறு பேர் திருமுழுக்கு பெற்றனர் என்றும் செய்தி குறிப்பு ஒன்று கூறுகின்றது.







All the contents on this site are copyrighted ©.