2009-11-18 16:02:00

திருத்தந்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மால்டா செல்வார் 


நவ.18,2009 திருத்தந்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மால்டா செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புனித பவுல் பயணம் செய்த கப்பல் பழுதடைந்து மால்டா கரையை 60ஆம் ஆண்டு அடைந்ததேனவும், அன்று விதைக்கப்பட்ட கிறிஸ்தவம் வேரூன்றி வளர்ந்ததன் 1950ஆம் ஆண்டை மால்டா கொண்டாடும் போது திருத்தந்தையின் பயணம் அமைவது சிறப்பு என்று செய்தி குறிப்பு ஒன்று கூறுகிறது. திருத்தந்தையின் இப்பயணத்திற்கு அந்நாட்டு தலைவர் ஜார்ஜ் அபெலா உட்பட பல தலைவர்களும், அந்நாட்டின் ஆயர் பேரவையும் அழைப்பு விடுத்துள்ளது. திருத்தந்தையின் பயணத்தின் போது, இளையோரைச் சந்திக்கும் நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகள் திட்டமிடப் பட்டுள்ளது. மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் இரு பயணங்கள் உட்பட, மத்தியதரைகடல் நாடுகளுக்கு திருத்தந்தை மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 1964இல் பிரித்தானிய அரசிடமிருந்து விடுதலை பெற்ற மால்டாவில் இன்று 41,000 மக்கள் வாழ்கின்றனர், அவர்களில் 98 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்கள் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.