2009-11-18 16:03:54

இதய நோய் மனிதகுலத்தின் மிகப் பழமையான நோய்; இதய நோயால் ஏற்படும் ஆபத்துகளைத் தீர்க்க ஆழ்நிலை தியானம் உதவும்


நவ.18,2009 இதய நோய் என்பது மனிதகுலத்தின் மிகப் பழமையான நோய் என்று அறிவியலார்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க, எகிப்திய அறிவியல் குழு ஒன்று கெய்ரோ அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள 22 மம்மிகளைச் சோதித்ததில் இந்த மம்மிகளின் இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் கடினப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பழமைக் காலங்களில் புகை பிடிப்பது, செயற்கை உணவுப் பொருள்களை உண்பது போன்ற பிரச்சனைகள் இல்லையெனினும், பிறப்பிலேயே மரபணு அளவில் இக்குறை பலரிடமும் காணப்பட்டிருக்கலாம் எனவும், இந்த ஆராய்ச்சியின் பயனாக இந்த நோய் பற்றிய பல பிதிய தகவல்கள் கிடைக்கும் என்றும் கலிபோர்னியா பல்கலை கழகத்தைச் சார்ந்த முனைவர் கிரகரி தாமஸ் கூறினார்.
 மேலும், அமெரிக்காவின் விஸ்கான்சின் மருத்துவக் கல்லூரியும், அயோவாவின் (Iowa ) மகரிஷி பல்கலைகழகமும் இணைந்து மேற்கொண்ட மற்றொரு ஆராய்ச்சியில் இதய நோயால் ஏற்படும் பல ஆபத்துகளைத் தீர்க்க ஆழ்நிலை தியானம் உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. American Heart Foundation ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் 201 அமெரிக்கர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதய நோயுள்ள இந்த 201 பேர் ஆழ்நிலை தியானத்தின் வழியே ஒன்பது ஆண்டுகளில் மிகச் சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளதை இந்த ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.