2009-11-16 16:41:38

நவம்பர் 17 ஹங்கேரி நாட்டின் அரசி புனித எலிசபெத்


அரசி எலிசபெத், ஹங்கேரி நாட்டு அரசர் இரண்டாவது ஆண்ட்ரூவின் மகள். இவளுக்கு 14 வயது நடந்த போது மன்னன் லூயிசுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டாள். இவள், தனது கணவர் இறந்த பின்னர் சொத்துக்களைப் பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தாள். ஏழை எளியவர்கள், நோயாளிகள் மீது மிகுந்த கருணை காட்டியவள். தனது 24வது வயதிலேயே இறைவனடி சேர்ந்தாள். தூய வாழ்வு வாழ்ந்த புனித அரசி எலிசபெத்துக்கு இயேசுவும் அன்னைமரியாவும் பலமுறை காட்சி கொடுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

வரலாற்றில் நவம்பர் 17

1869 - எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.

1933 - அமெரிக்க ஐக்கிய நாடு, சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.








All the contents on this site are copyrighted ©.