2009-11-14 14:34:15

மெக்சிகோவில் போதைப்பொருள் வியாபாரிகளின் கொலைபாதகச் செயல் முறைகளுக்கு ஆயர் பேரவை வன்மையான கண்டனம்


நவ.14,2009 மெக்சிகோவில் போதைப்பொருள் வியாபாரிகளின் கொலைபாதகச் செயல் முறைகளை வன்மையாய்க் கண்டித்துள்ள அதேவேளை, அந்நாட்டு அரசியல்வாதிகள் ஊழலை ஒழிக்குமாறு ஆயர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
மெக்சிகோவில் இடம் பெறும் வன்முறைகள் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை, தளிர்த்து வரும் முறைகேடான போதைப் பொருள் வியாபாரத்திற்கு அனுமதியளிக்கும் விதமாக, அவ்வியாபாரிகளுக்கு முழு காப்புரிமை கொடுக்கும் நடவடிக்கையையும் அகற்றுமாறு வலியுறுத்தியுள்ளது.
போதைப்பொருள் தொடர்புடைய வன்முறைகள் மற்றும் குற்றங்களால் கடந்த மூன்றாண்டுகளில் பதின்மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதையும் ஆயர்களின் அறிக்கைக் குறிப்பிட்டுள்ளது.
வன்முறையைத் தூண்டுபவர்களைத் தண்டிக்காமல் விடுவது, வெறுப்பு, பழியுணர்வு, மனக்காழ்பபு, வெஞ்சினம் போன்றவை மக்கள் மத்தியில் உருவாகக் காரணமாக அமையும் என்றும் மெக்சிகோ ஆயர்கள் எச்சரித்துள்ளனர்







All the contents on this site are copyrighted ©.