2009-11-13 16:44:47

மனித உரிமைகள் ஓரங்கட்டப்படும் போது திருச்சபை மௌனம் காக்காது, திருத்தந்தை


நவ.13,2009 திருச்சபை, நாடுகளின் அரசியலில் நேரடியாக தலையிடாது எனினும், மனித உரிமைகள் ஓரங்கட்டப்படும் போது அது மௌனம் காக்காது மற்றும் நீதியை ஊக்குவிக்க எப்பொழுதும் முயற்சிக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

“கோர் ஊனும்” என்ற திருப்பீடத்தின் பிறரன்பு அவை உரோமையில் நடத்தும் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அறுபது பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

விசுவாசம் என்பது, ஆன்மீக ரீதியான உந்து சக்தி என்பதால், நீதியான வழிகளைத் தேடுவதற்கு திருச்சபை எப்பொழுதும் முயற்சித்து வருகின்றது என்று அவர் மேலும் கூறினார்.

கிறிஸ்துவின் திருமுகத்தில் தங்கள் கண்களைப் பதித்து வாழ அழைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சமூகம், உலகின் போக்குகளின்படி நடக்காமல், அதேசமயம் உலகை அன்பு செய்து அதற்குச் சேவையாற்றவும் அழைக்கப் பெற்றுள்ளது என்பதை நினைவுபடுத்தினார் திருத்தந்தை.

திருப்பீடத்தின் “கோர் ஊனும்” அவை நடத்தும் இந்த மூன்று நாள் ஆண்டுக் கூட்டம் இச்சனிக்கிழமை நிறைவு பெறும்







All the contents on this site are copyrighted ©.