2009-11-12 16:21:44

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதற்கு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் உந்துதலாக இருந்தார் - போலந்தின் முன்னாள் அரசுத் தலைவர்


நவ.12,2009 பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 20 ஆம் ஆண்டு நினைவை ஜெர்மனி கொண்டாடி வரும் இந்நேரத்தில், அந்த சுவர் இடிக்கப்பட்டதற்கு உந்துதலாக இருந்த பலரில் மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலும் ஒருவர் என்று போலந்தின் முன்னாள் அரசுத் தலைவரும், சமாதானத்திற்கான நொபெல் பரிசு பெற்றவருமான லேக் வவென்சா கூறியுள்ளார். ஜெர்மனியில் நடைபெற்றுவரும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பல உலகத்தலைவர்களில் ஒருவரான வவென்சா, ஒருங்கிணைந்த ஐரோப்பா உண்மையின் அடிப்படையில் உருவாக்கப்படவேண்டுமேன்றும் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதற்கும், கிழக்கு ஜெர்மனி விடுதலை பெற்றதற்கும் அரசியல்வாதிகளைக் காட்டிலும் மக்களே முக்கிய காரணம் என்றும் எடுத்துரைத்தார். திரு வவென்சாவின் உரையின் போது, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் போலந்தில் பயணம் செய்த காட்சிகளும், அவரது பயணத்தால் அந்நாட்டில் உருவான மாற்றங்களும் வீடியோ பதிவுகளாகக் காட்டப்பட்டன. கம்யூனிச நாட்டிற்கு பயணம் செய்த முதல் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் என அந்நேரத்தில் நினைவுகூரப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.