2009-11-12 16:22:35

பிலிப்பின்ஸ் நாட்டில் கடத்தப்பட்ட அயர்லாந்து குரு மைக்கில் சின்னோட், நவம்பர் 11 இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளார்


நவ.12,2009 கடந்த அக்டோபர் 11ம் தேதி பிலிப்பின்ஸ் நாட்டில் கடத்தப்பட்ட அயர்லாந்து குரு மைக்கில் சின்னோட், நவம்பர் 11 இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன. அயர்லாந்து, பிலிப்பின்ஸ் ஆகிய இரு நாடுகளின் முயற்சியால் இது சாத்தியமானது என்றும், இவரை மீட்க பிணையத் தொகை எதுவும் அளிக்கப்படவில்லை எனவும் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கில் மார்டின் கூறினார். பிணையத் தொகை கொடுக்கப்பட்டால், உலகின் பல நாடுகளிலும் பணி புரிந்து வரும் இறைபணியாளர்களையும், சிறப்பாக அயர்லாந்திலிருந்து சென்று பிற நாடுகளில் பணி புரிந்துவரும் பலரையும் பாதிக்கும் என்று அமைச்சர் கூறினார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவிய  இந்த கடினமானச் சூழ்நிலையில் அருட்தந்தை சின்னோட் குடும்பத்தினர் காட்டிய பொறுமை, பண்பு இவை போற்றுதற்குரியது எனவும், அருட்தந்தையின் விடுதலை குறித்து நடந்த பேச்சு வார்த்தைகளின் போது அவரது சபையைச்சார்ந்த கொலம்பைன் குருக்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை எனவும் அமைச்சர் மார்டின் கூறினார். கொலம்பைன் குருக்களின் ஆசியத் தலைவர் அருட்திரு Pat O'Donoghue அருட்தந்தை சின்னோட்டின் விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.