US Bishops welcome ban on federal funding for abortion
நவ.12,2009 நல ஆதரவு திட்டங்களுக்கான அரசு பணத்தை, பொறுப்பற்ற கருகலைத்தல்களுக்கென பயன்படுத்துவதைத்
தடை செய்துள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் பிரதிநிதிகள் அவையின் செயல் குறித்து தன்
பாராட்டுதல்களை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பிரான்சிஸ்
ஜார்ஜ். நல ஆதரவு திட்டங்களில் அமுல் படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள், கருகலைத்தலுக்கான
நிதி ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதாக இருக்காது என அரசுத் தலைவர் பாரக் ஒபாமா ஏற்கனவே
அளித்திருந்த வாக்குறுதி காப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார் கர்தினால். மக்கள் பிரதிநிதிகள்
அவையிலிருந்து தற்போது செனட் அவைக்குச் சென்றுள்ள இம்மசோதாவில் மனச் சான்றின் உண்மைகள்
எப்போதும் காப்பாற்றப்படவேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்த உள்ளதாகவும் கூறினார்
சிகாகோ கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ்.