நவ.12,2009 பிரித்தானிய அரசு புதிதாக பத்து அணுசக்தி நிலையங்கள் அமைப்பது குறித்து அயர்லாந்து ஆயர்கள்
தங்கள் விமர்சனங்களைத் தெரிவித்துள்ளனர். அயர்லாந்து திருச்சபையில் பொறுப்பிலிருக்கும் அனைவரும் பிரித்தானிய
அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சியைப் பெரிதும் எதிர்ப்பதாக, காஷெல் (Cashel) மறைமாவட்ட பேராயர்
Dermot Clifford கூறியுள்ளார். அயர்லாந்து அரசும், சுற்றுசூழலில் அக்கறை உள்ள பல குழுக்களும்
கடந்த சில ஆண்டுகளாக இவ்வணுசக்தி நிலையங்கள் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதும்,
பிரித்தானிய அரசு இம்முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு, 2018ஆம் ஆண்டுக்குள் இந்நிலயங்களை
கட்டிமுடிக்கப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளது. 1957 ஆம் ஆண்டு அணுக்கதிர்கள் சம்பத்தப்பட்ட
ஒரு விபத்து நிகழ்ந்ததையும் அந்த விபத்தில் பிரிட்டனும், அயர்லாந்தும் தீய பல விளைவுகளைச்
சந்தித்ததையும் நினைவு கூர்ந்த பேராயர் Clifford , பிரித்தானிய அரசு சக்திகளைப் பெறுவதற்கு சுற்றுச்
சூழலைப் பாதிக்காத மற்ற பல வழிகளைப் பற்றி சிந்திப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும் எனக்
கூறினார்.