2009-11-11 14:59:10

ஏனையக் கோளங்களில் உயிருள்ளவை குறித்து வத்திக்கானில் அறிவியலாளர் கருத்தரங்கு


நவ. 11, 2009 ஏனையக் கோளங்களில் உயிருள்ளவைகள் இருக்கின்றனவா என்ற புதிருக்கான பல்வேறு சிறு தகவல்கள் நம்மை அடைந்துள்ளன, இந்த தேடல் இனியும் தொடரும் என்று அரிசோனா பல்கலைகழகத்தின் வானியல் துறையைச் சார்ந்த க்ரிஸ் இம்பீ (Chris Impey) கூறினார். வத்திக்கானில் நேற்று நடந்து முடிந்த ஒருவார அறிவியலாளர் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்ட 30 அறிவியலாளர்களில் ஒருவரான இம்பீ, கருத்தரங்கின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார். வத்திக்கான் வானியல் கூடத்தின் தலைவரான இயேசு சபைக் குரு ஜோஸ் பூநெஸ், (Jose Funes) திருச்சபை இவ்வாறான ஒரு அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவது மிகவும் முக்கியமான முயற்சி என்று கூறினார். அறிவியல் ஆராய்ச்சிகள் வழியாகக் காணக்கிடக்கும் உண்மைகளைத் திருச்சபை வரவேற்பதாகவும், தவறானப் பாடங்கள் பரப்பப்படும் போது சுட்டிக்காட்டுவதும் திருச்சபையின் கடமை என்றும் கர்தினால் ஜியோவானி லயோலோ கூறியதைச் சுட்டிக் காட்டிய அருட்தந்தை பூநெஸ், அறிவியல் வழி மனித வாழ்வு முன்னேறுவதை திருச்சபை உற்சாகப் படுத்தி வந்துள்ளது என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.