2009-11-11 15:00:01

இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இரு நாடுகளில் சிறைபடுத்தப்பட்டோருக்கான ஞாயிறு அனுசரிக்கப் படுகிறது


நவ. 11, 2009 இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள கத்தோலிக்க பங்கு தளங்களில் வருகிற நவம்பர் 15 சிறைபடுத்தப்பட்டோருக்கான ஞாயிறு அனுசரிக்கப் படுகிறது. "விடா முயற்சியுடன் நம்பிக்கை கொள்வோம்" என்ற பொருளை மையமாகக் கொண்டு இந்த ஞாயிறு மேற்கொள்ளப்படும் பல முயற்சிகளில் சிறைபடுத்தப் பட்டோரை இயல்பு வாழ்வுக்கு கொண்டு செல்லும் பல நிகழ்வுகள் நடைபெறும் என்று செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. எந்த ஒரு கைதியும் எதாவது ஒரு சமூகத்திலிருந்து வந்தவர் என்றும், இது போன்ற முயற்சிகள் இக்கைதிகளை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் வழிகள் என்றும் கூறினார், ஸால்பொர்ட் (Salford) ஆயர் டெரென்ஸ் ப்ரெய்ன் (Terence Brain ).  ஒவ்வொரு பங்கிலும் செபங்கள், சுவரொட்டிகள், கிறிஸ்மஸ் வாழ்த்து மடல்கள் மூலம் சிறைபடுத்தப்பட்டோரின் பிரச்சனைகளைப் பலரும் உணரும் வண்ணம்  முயற்சிகள் அமையும்  என்றும், BaCC, PACT வின்சென்ட் தே பால் சபை ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து இஞ்ஞாயிறு நிகழ்வுகளை  மேற்கொள்ளும் என்றும் PACT அமைப்பின் இயக்குனர் Andy Keen-Downs தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.