2009-11-10 15:27:39

ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் பிரிட்டன் படைவீரர்கள் தங்கள் பணியைச் செய்வதற்குப் போதுமான ஆதரவும் வளங்களும் வழங்கப்படுமாறு பிரிட்டன் ஆயர் வேண்டுகோள்


நவ.10,2009 ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் பிரிட்டன் படைவீரர்கள் தங்கள் பணியைச் செய்வதற்குப் போதுமான ஆதரவும் வளங்களும் வழங்கப்படுமாறு பிரிட்டன் இராணுவ மறைமாவட்டத்திற்குப் பொறுப்பான ஆயர் கேட்டுக் கொண்டார்.

ஞாயிறன்று இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் இறந்த படைவீரர்களுக்கென திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய ஆயர் ரிச்சர்டு மோட், இறக்கும் படைவீரர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றது என்று கவலை தெரிவித்தார்.

போரைப் போன்ற ஆபத்தான காரியம் வேறு எதுவும் இல்லையென்றுரைத்த ஆயர், தற்போது பணியிலுள்ள போர் வீரர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுமாறு வலியுறுத்தினார்.

அதேசமயம், ஆப்கானிஸ்தானில் இராணுவ நடவடிக்கைகள் ஒருபக்கம் இடம் பெற்றுக் கொண்டிருந்தாலும், மறுபக்கம் அந்நாட்டின் எட்டு வருட சண்டையை நிறுத்துவதற்குத் தூதரக வழிகளைக் கையாளுமாறும் அழைப்புவிடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 2001ம் ஆண்டு முதல் இதுவரை 232 பிரிட்டன் துருப்புகள் கொல்லப்பட்டுள்ளனர். 2009ம் ஆண்டில் மட்டும் 95 படைவீரர்கள் இறந்துள்ளனர்







All the contents on this site are copyrighted ©.