2009-11-09 15:16:41

ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையினர் எளிதாகக் கத்தோலிக்கத் திருச்சபையில் சேருவதற்கு வத்திக்கான் எடுத்துள்ள செயல்பாட்டைப் பாராட்டியுள்ளார் தென்கொரிய மூத்த ஆங்கிலிக்கன் சபை குரு.


நவ.09,2009 பழமைவாத ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையினர் எளிதாகக் கத்தோலிக்கத் திருச்சபையில் சேருவதற்கு வத்திக்கான் எடுத்துள்ள செயல்பாடு, கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிச் செல்வதற்கான ஒருபடி என்று தென்கொரிய மூத்த ஆங்கிலிக்கன் சபை குரு ஒருவர் கூறினார்.

இரு சபைகளுக்கிடையே உறுப்பினர்களை பரிமாற்றம் செய்வது கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு உதவும் என்று தென்கொரிய ஆங்கிலிக்கன் சபையின் மாகாண அலுவலகத்தின் பொதுச் செயலர் குரு ஆபிரகாம் கிம் குவாங்-ஜூன் கூறினார்.

ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையில், பெண்களை ஆயர்களாகத் திருநிலைப்படுத்துவது, ஒரேபாலினச் சேர்க்கையாளரைக் குருக்களாக்குவது போன்ற நடவடிக்கைகள் இடம் பெறுவதை எதிர்க்கும் அச்சபையினர் கத்தோலிக்கத் திருச்சபையில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.