2009-11-07 14:54:14

பெர்லின் சுவர் வீழ்ந்தது, மக்களின் சுதந்திரத்திற்கான தாகம் மற்றும் கடவுளுக்கு எதிரான கருத்துக் கோட்பாட்டை மையமாகக் கொண்ட அமைப்புகள் பலவீனமடைந்ததன் அடையாளம், திருப்பீட பேச்சாளர்


நவ.07,2009 பெர்லின் சுவர் வீழ்ந்தது, மக்களின் சுதந்திரத்திற்கான தாகம் மற்றும் கடவுளுக்கு எதிரான கருத்துக் கோட்பாட்டை மையமாகக் கொண்ட அமைப்புகளின் பலவீனத்தைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது என்று திருப்பீட பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.

நவம்பர் 9ம் தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் இருபதாம் ஆண்டு நினைவுகூரப்படுவதையொட்டி தொலைக்காட்சியில் பேசிய வத்திக்கான் வானொலி இயக்குனராகிய அருட்தந்தை லொம்பார்தி, சுதந்திரத்தைத் தேடி இந்தச் சுவரைக் கடந்துவர முயற்சித்த போது இறந்த எண்ணற்ற மக்களையும் நினைவுகூர்ந்தார்.

திருத்தந்தை 2ம் ஜான் பவுல், தமது நாட்டினர் மற்றும் அதன் அண்டை நாட்டினர் மீது ஏற்படுத்திய தாக்கத்தையும் அவர் குறிப்பிட்டார்.

இரும்புத்திரை என்றழைக்கப்படும் பெர்லின் சுவர் வீழ்ந்தாலும் உலகில் பிற சுவர்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த கவலையையும் அருட்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.

1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி இரவு பெர்லின் சுவர் இடிப்பு எழுச்சி தொடங்கியது

 








All the contents on this site are copyrighted ©.