2009-11-06 14:49:26

நற்செய்தி தெருக்களில் அறிவிக்கப்படும் போது அதன் வல்லமை தனிப்பட்ட விதத்தில் வெளிப்படுகின்றது, திருப்பீடம்


நவ.06,2009 நற்செய்தி தெருக்களில் அறிவிக்கப்படும் போது அதன் வல்லமை தனிப்பட்ட விதத்தில் வெளிப்படுகின்றது என்று குடியேற்றதாரர்கள் மற்றும் பயணிகளுக்கான திருப்பீட அவை அறிவித்தது.

கடந்த மாதம் இறுதியில் வத்திக்கானில் நடைபெற்ற, “தெருக்களில் வாழ்வோருக்கான மேய்ப்புப்பணி” குறித்த முதல் ஐரோப்பிய கூட்டத்தின் இறுதி அறிக்கையை வெளியிட்ட குடியேற்றதாரருக்கான திருப்பீட அவை, தெருகக்ளில் வாழ்வோர் மற்றும் வேலை செய்வோருக்கு நற்செய்தி அறிவிப்பதில் ஏற்படும் வல்லமை மற்றும் சவால்கள் பற்றிக் கூறியது.

சாலைகள், இரயில் நிலையங்களில் வாழ்வோர், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், தெருச்சிறார், தெருவில் வாழும் பெண்கள், வீடற்றவர் என வகைப்படுத்தி அவர்களுக்கு ஆற்ற வேண்டிய மேய்ப்புப்பணிகளையொட்டிய 57 தீர்மானங்களையும் 51 பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது அவ்வறிக்கை.

துன்புறுவோர், குறிப்பாக தெருக்களில் கஷ்டப்படுவோருக்கு நற்செய்தி அறிவிப்பதற்கு நமது பயமே தடையாக இருக்கின்றது என்று கூறும் இத்திருப்பீட அவை, இவர்களோடு முடிந்த அளவு விசுவாசப் பயணம் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளது.



 








All the contents on this site are copyrighted ©.