2009-11-06 14:54:36

ஆப்கானிஸ்தானில் தமது பணியாளர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு வேலை செய்வோரில் 12 விழுக்காட்டினரைத் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற்றுவதாக ஐ.நா. அறிவிப்பு


நவ.06,2009 ஆப்கானிஸ்தானில் தமது பணியாளர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு வேலை செய்வோரில் 12 விழுக்காட்டினரைத் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற்றுவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவித்துள்ளது. .

கடந்த அக்டோபர் 28ம் தேதி காபூலிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடத்தப்பட்ட தலிபான் வன்முறைத் தாக்குதலில் ஆறு ஊழியர்கள் கொல்லப்பட்டதையடுத்து, தங்கள் ஊழியர்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் 600 பேரை அந்நாட்டிலிருந்து வெளியேற்றுவதாக ஐ.நா. அறிவித்தது.

ஐ.நா. நிறுவனம் ஆப்கானிஸ்தானில், ஏறத்தாழ ஐந்தாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் 3700 பேர் ஆப்கானியர்கள் மற்றும் 1300 பேர் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

மேலும், இந்நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.வின் கேய் எடி, ஐ.நா ஊழியர்களைப் பொறுத்தவரை பாதுகாப்பு நிலை என்பது ஆப்கானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் ஐ.நா நாட்டை விட்டு வெளியே தள்ளப்படாது என்றும், அதிபர் ஹமித் கர்சாய் திறமையானவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்றும் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவி்ததார்.



 








All the contents on this site are copyrighted ©.