2009-11-05 16:17:28

நவம்பர் 06 நற்செய்தி லூக். 16, 1-8


அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ' செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு ' உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது ' என்று அவரிடம் கூறினார்.3 அந்த வீட்டுப் பொறுப்பாளர் ' நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் ' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம் ' நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார்.6 அதற்கு அவர் ' நூறு குடம் எண்ணெய் ' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம் ' இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும் ' என்றார். பின்பு அடுத்தவரிடம் 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர் 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர் 'இதோ உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார்.'நூறு கோரோசு' என்பது கிரேக்க பாடம். நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால் தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில் ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.








All the contents on this site are copyrighted ©.