2009-11-05 16:05:03

குடியேற்றதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையை நாடுகள் தற்சமயம் அதிகமாகக் கொண்டிருக்கின்றன, ஐ.நா.பொதுச் செயலர்


நவ.05,2009 நல்ல வாழ்க்கைத்தர வாய்ப்புகள் தேடி பெருமளவான மக்கள் நாடு விட்டு நாடு குடிபெயர்ந்து வரும் இந்தக் காலக் கட்டத்தில் குடியேற்றதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையை நாடுகள் தற்சமயம் அதிகமாகக் கொண்டிருக்கின்றன என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.

குடியேற்றமும் வளர்ச்சியும் பற்றி ஏத்தென்சில் இடம் பெற்ற உயர்மட்ட அளவிலான மூன்றாவது உலகக் கருத்தரங்கில் பேசிய பான் கி மூன், கொள்கைகளும் சட்டங்களும் மக்கள் மற்றும் விழுமியங்கள் பற்றி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

21 கோடியே 40 இலட்சமாக இருக்கும் உலக அளவிலான குடியேற்றதாரர்களின் எண்ணிக்கை என்றுமில்லாத அளவுக்கு தற்சமயம் அதிகரித்துள்ளது என்றுரைத்த அவர், மக்களின் இந்த இடப்பெயர்வு நல்ல முறையில் கையாளப்பட்டால் மனித நலத்தையும் வளர்ச்சியையும் பெருமளவில் மேம்படுத்த முடியும் என்றும் சுட்டிக் காட்டினார்.

அதேசமயம் குடியேற்றதாரர்களும் தங்களின் சொந்த நாடுகளுக்குப் பணம் அனுப்புவதன் மூலம் அந்நாடுகளின் பொருளாதாரம் வளர உதவியாக இருக்கிறார்கள் என்றும் ஐ.நா.பொதுச் செயலர் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.