2009-11-05 16:02:14

இத்தாலியப் பள்ளிகளில் சிலுவைகளை அகற்ற வேண்டுமென்ற நீதிமன்றத் தீர்ப்பு, நமக்கு மிகவும் பிடித்தமான அடையாளத்தை நம்மிடமிருந்து எடுத்துவிட முயற்சிக்கும் நடவடிக்கையாக இருக்கின்றது, திருப்பீடச் செயலர்


நவ.05,2009 இத்தாலியப் பள்ளிகளில் சிலுவைகளை அகற்ற வேண்டுமென்ற மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு, நமக்கு மிகவும் பிடித்தமான அடையாளத்தை நம்மிடமிருந்து எடுத்துவிட முயற்சிக்கும் நடவடிக்கையாக இருக்கின்றது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே தனது கவலையை தெரிவித்தார்.

ஸ்ட்ராஸ்பூர்க்கிலுள்ள இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே, விசுவசிப்பவர்கள், விசுவசிக்காதவர்கள் என எல்லாருமே நமது விசுவாசத்தின் அடையாளங்களைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்று கூறினார்.

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இத்தாலிய அரசின் தீர்மானத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள கர்தினால், திருச்சிலுவை, உலகளாவிய அன்பின் மற்றும் வரவேற்பதன் அடையாளமே தவிர ஒதுக்குவதன் அடையாளம் அல்ல என்றும் தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பிய நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு பற்றிக் கருத்து தெரிவித்த திருப்பீட சார்பு தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ, நமக்கு மிகவும் பிடித்தமான அடையாளத்தை நம்மிடமிருந்து உலகில் அனைத்து மனிதர்களுக்கிடையே சமத்துவம் எனும் கருத்தை பரப்பிய கிறிஸ்தவப் புரட்சியின் அடையாளமாக சிலுவை இருக்கின்றது என்று 1988ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி இத்தாலிய கம்யூனிச கட்சி உறுப்பினர் அந்தோணியோ கிராம்ஸ்சி கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.