2009-11-04 14:55:33

இறந்தோரைப்  புதைப்பது, அல்லது தகனம் செய்வது குறித்த திருச்சபையின் கருத்துக்களைத் தெளிவாக்கும் முயற்சியில் இத்த்தாலியத் தலத் திருச்சபை


நவ. 04, 2009. இறைபதம் அடைந்தோரைச் சிறப்பாக நினைவுகூரும் நவம்பர் மாதத்தில், இறந்தோரைப்  புதைப்பது, அல்லது தகனம் செய்வது குறித்த திருச்சபையின் கருத்துக்களைத் தெளிவாக்கும் முயற்சியில் இத்த்தாலியத் தலத் திருச்சபை ஈடுபட்டுள்ளது. 1963 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் இறந்த உடலைத் தகனம் செய்வது பற்றி வெளியிட்ட கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தி, இத்தாலிய ஆயர் பேரவை வரும் நவம்பர் 9 ஆம் தேதி அசிசி நகரில் நடைபெறும் இத்தாலிய ஆயர் பேரவைக் கூட்டத்தின் அனுமதியுடன் இறந்தோருக்கு கிறீஸ்தவ அடக்கம் தரும் முறை பற்றிய ஒரு குறிப்பு நூலை வெளியிட உள்ளது. உடல் தகனத்திற்குப் பின் சாம்பலை வீட்டில் பாதுகாப்பது, அல்லது சாம்பலைப் பல இடங்களில் தூவுவது குறித்து இக்குறிப்பு நூலில் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. திருச்சபைக்கும், இத்தாலிய அரசுக்கும் இவ்விரு செயல்பாடுகள் குறித்து வேறுபாடுகள் உள்ளன.  சாம்பலை வீட்டில் பாதுகாப்பதற்கும், அல்லது பல இடங்களில் தூவிவிடுவதற்கும் இத்தாலிய அரசு அனுமதி அளித்துள்ளது, எனினும் இந்தச் செயல்களை திருச்சபை அங்கீகரிக்கவில்லை என ஆயர் பேரவை கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.