2009-11-03 15:07:52

உலகில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த காலத்திலிருந்து கோவிலுக்கு வரும் விசுவாசிகளின் எண்ணிக்கை அயர்லாந்தில் அதிகரித்துள்ளது


நவ.03,2009 உலகில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த காலத்திலிருந்து கோவிலுக்கு வரும் விசுவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அண்மையில் அயர்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பொருளாதார நெருக்கடி என்பது மக்களைக் கோவிலுக்குச் செல்லத் தூண்டியுள்ளது மட்டுமல்ல, கோவிலுக்கு அவர்கள் சுயமாகச் செலுத்தும் காணிக்கையையும் அதிகரிக்க வைத்துள்ளது எனக்கூறும் டப்ளின் மத-சமூக நிறுவனத்தின் இயக்குனர் டேவிட் குயின், கடந்த ஆண்டு 54 விழுக்காட்டு மக்கள் மாதம் ஒருமுறையாவது கோவிலுக்குச் செல்லும் நிலை இருந்தது, இவ்வாண்டு அது 66 விழுக்காடாக அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.

ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போல் அல்லாமல் அயர்லாந்தில் கோவிலுக்கு வரும் விசுவாசிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறையாமல் இருபப்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.










All the contents on this site are copyrighted ©.