2009-11-02 16:21:31

ஹொண்டுராஸ் அரசியல் நெருக்கடிகளுக்கானத் தீர்வு குறித்து கத்தோலிக்கத் தலைவர்கள் மகிழ்ச்சி


நவ.02,2009 ஹொண்டுராசின் அரசுத் தலைவரை நான்கு மாதங்களுக்கு முன் பதவி நீக்கம் செய்ததால் எழுந்த அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான அரசியல் ஒப்பந்தம் குறித்து அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

அரசியலமைப்பு திருத்த முயற்சிகளையும் அரசியல் குற்றங்களுக்கான கருணை மன்னிப்புக்களையும் தடை செய்வதுடன் அதிகாரப் பகிர்வுடன்கூடிய புதிய அரசில், பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசுத் தலைவர் மானுவேல் ஜெலாயாவை மீண்டும் பதவியில் அமர்த்தவும் இப்புதிய ஒப்பந்தம் வழிவகுப்பதை ஹொண்டுராசின் காரித்தாஸ் அமைப்பின் தலைவர் அருட்திரு ஜெர்மன் காலிக்ஸ் பாராட்டினார்.

அண்மை அரசியல் பதட்ட நிலைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள தலத்திருச்சபையில் ஒப்புரவை ஊக்குவிக்கும் நோக்கில் பல திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அந்நாட்டு காரித்தாஸ் அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.