2009-10-31 15:47:33

புனித பூமியில் குருக்களும் துறவியரும் தங்கியிருக்கும் காலத்தின் அளவு குறைக்கப்படுகின்றது


அக்.31,2009 புனித பூமியில் குருக்களும் துறவியரும் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது மற்றும் அங்கு தங்கியிருக்கும் காலத்தின் அளவும் குறைக்கப்படுகின்றது என்று ஆசியச் செய்தி நிறுவனம் அறிவித்தது.

இஸ்ரேல் அரசின் உள்துறை அமைச்சகத்தின் இந்நடவடிக்கை பற்றித் தகவல் வெளியிட்ட அச்செய்தி நிறுவனம், அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், ஐரோப்பா ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த பிரபலமானவர்கள் மற்றும் விவிலிய வல்லுனர்களுக்கும் விசா மறுக்கப்படுகின்றது என்று கூறியது.

புதிய நெத்தான்யாஹூவின் அரசில் உள்துறை அமைச்சகம் ஷாஸ் என்ற அடிப்படைவாத கட்சியிடம் இருப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது.

அரசின் இந்நடவடிக்கை இஸ்ரேலுக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான உறவுகளில் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.