2009-10-31 15:48:06

1995ம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டு மூத்த அதிகாரிகள் மியான்மார் பயணம்


அக்.31,2009 அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கையின் கீழ், அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் மியான்மார் தலைவர்களைச் சந்திப்பதற்காக, பத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக அந்நாடு செல்லவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான அமெரிக்க அரசின் உதவிச் செயலர் கர்ட் கேம்ப் பெல், துணை உதவிச் செயலர் ஸ்கோட் மார்சியெல் ஆகிய இருவரும் இந்த நவம்பர் 3,4 தேதிகளில் மியான்மார் செல்லவிருக்கின்றனர் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் ஏதோ ஒருவகையான கைது அனுபவம் மற்றும் வீட்டுக் காவல் தண்டனையை அனுபவித்து வரும் மியான்மார் எதிர்க் கட்சித் தலைவி ஆங் சான் சு கியை இவர்கள் சந்திப்பார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

1995ல் ஐ.நா.வுக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தூதுவர் மதலேய்ன் ஆல்பிரைட் மியான்மார் சென்றார். அதற்குப் பின்னர் அந்நாட்டிந் எந்த அதிகாரியும் மியான்மார் செல்லவில்லை.








All the contents on this site are copyrighted ©.