2009-10-30 16:14:20

மெஹாலயக் குன்றுகளில் உரேனியம்: உரையாடல் மூலம் தீர்வு காண மாறு ஷில்லாங் பேராயர் அழைப்பு


அக்.30,2009 இந்தியாவின் மெஹாலயக் குன்றுகளில் உரேனியம் தாதுப்பொருள் சுரங்கம் அமைப்பதற்கான அரசின் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள வேளை, இப்பிரச்சனைக்கு உரையாடல் மூலம் தீர்வு காணுமாறு ஷில்லாங்க் உயர்மறைமாவட்ட பேராயர் டாமினிக் ஜாலா அழைப்பு விடுத்துள்ளார்.

அரசின் உரேனியச் சுரஙகம் அமைப்பது குறித்த திட்டம், பலர் புலம் பெயரும் அச்சுறுத்தலை முன்வைத்துள்ளது என்று சொல்லி, மாணவர்கள், பெண்கள் மற்றும் பூர்வீக இன அமைப்புகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதையொட்டி கருத்து தெரிவித்த பேராயர் ஜாலா, கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மெகாலயாவில், உரேனியச் சுரஙகம் அமைப்பது குறித்து அரசு தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக மக்களோடு கலந்து பேச வேண்டுமென்று கத்தோலிக்கத் திருச்சபை விரும்புகின்றது என்று கூறினார்.

உரேனியம் அதிகமாக இருக்கின்ற 422 ஹெக்டேர் நிலப் பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு இந்திய உரேனிய கார்ப்பரேஷனுக்கு அனுமதி வழங்க அம்மாநில அரசு தீர்மானித்திருக்கின்றது என்று ஊடகங்கள் கூறுகின்றன.

 








All the contents on this site are copyrighted ©.