2009-10-30 16:15:45

ஆசியாவின் அடையாளமாக இருக்கும் புலி இனம், இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் அழியக்கூடிய ஆபத்தை எதிர் நோக்குகிறது, சர்வதேச விஞ்ஞானிகள்


அக்.30,2009 ஆசியாவின் அடையாளமாக இருக்கும் புலி இனம், இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் அழியக்கூடிய ஆபத்தை எதிர் நோக்குவதாக சர்வதேச விஞ்ஞானிகள் கழகம் எச்சரித்துள்ளது.

காட்மண்டில் இவ்வெள்ளியன்று நிறைவு பெற்ற புலிகள் பற்றிய உலக கருத்தரங்கில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் பேசுகையில், ஆசியாவின் சமய மற்றும் கலாச்சார அடையாளமாக இருக்கின்ற புலி போன்ற விலங்கு இவ்வளவு ஆபத்தான சூழலில் இருப்பது கவலையளிக்கின்றது என்று கூறினர்.

வல்லுனர்களின் அறிக்கையின்படி, ஆசியாவின் 12 நாடுகளின் காடுகளில் தற்சமயம் 3500 புலிகள் உள்ளன. ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட புலிகள் இருந்தன.

புலிகளின் அழிவுக்கு, காடுகள் அழிப்பு மற்றும் வேட்டையாடுதல் முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. புலித்தோல் வியாபாரத்தால் கோடிக்கணக்கான யூரோக்கள் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கருத்தரங்கில் இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட 20 நாடுகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.










All the contents on this site are copyrighted ©.