2009-10-29 15:59:10

வரலாற்றில் அக்டோபர் 30 புனிதர்கள் ஜெர்மானுஸ், ஜெரார்டு மஜெல்லா


1726ம் ஆண்டு இத்தாலியில் பிறந்த ஜெரார்டு, திருநற்கருணை மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். நீ கடவுளுக்காக மட்டும் துன்பப்பட்டால், அந்தத் துன்பங்கள் இம்மண்ணில் விண்ணக வாழ்வை அனுபவிக்க உதவும். கடவுளது விருப்பத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும் என்று இவர் அடிக்கடி சொல்வார். ஆவிகளைக் கண்டுணர்தல், இறைவாக்கு சொல்லுதல், காட்சிகள் காணுதல் எனப் பல அசாதாரண வரங்களைப் பெற்றிருந்தவர் புனித ஜெரார்டு.

1485 - ஏழாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1502 - வாஸ்கோட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்

1920 - ஆஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.

1922 – பெனிட்டோ முசோலினி இத்தாலியின் பிரதமர் ஆனார்.

1945 - இந்தியா ஐநாவில் இணைந்தது.

1964 - இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்த உதவிய ஸ்ரீமா-சாஸ்திரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.