2009-10-29 15:40:25

மறைமாவட்டக் குருக்களின் அப்போஸ்தலிக்க ஐக்கியத்தின் முதல் மாநாடு


அக். 29, 2009. மறைமாவட்டக் குருக்களின் அப்போஸ்தலிக்க ஐக்கியத்தின் (Apostolic Union of Clergy ) முதல் மாநாடு  வரும் நவம்பர் 4,5 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஐக்கியங்கள் 70 நாடுகளில் செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவில் இந்த ஐக்கியம் 50 ஆண்டுகளுக்கு முன்னால் புனேயில் உள்ள பாப்பிறை குருமடத்தில் ஆரம்பிக்கப்பட்டதெனவும் இவ்வைக்கியத்தின் இந்தியத் தலைவர் அருட்தந்தை டானல்ட் டி சூசா தெரிவித்தார். ஒவ்வொரு நாட்டிலும் இவ்வைக்கியத்தின் வழியாக மறைமாவட்டக் குருக்கள் ஒருவருக்கொருவர் பல்வேறு வழிகளில் உதவி வருவதாகத் தெரிவித்த அருட்தந்தை டி சூசா, நவம்பரில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு இவ்வைக்கியத்தின் அகில உலகத் தலைவர் அருட்தந்தை ஜூலியோ போதியா (Julio Botia) மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகள், இவ்வைக்கியத்தின் patrons ஆயர் பிரெடெரிக் டி சூசா, துணை ஆயர் பிரான்கோ முலக்கல் ஆகியோரும் கலந்து கொள்வர் என்று அருட்தந்தை டி சூசா தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.