2009-10-28 15:52:30

திருப்பீட சமூகத் தொடர்புத் துறை திருச்சபை கணணி கலாச்சாரத்துடன் கொள்ள வேண்டிய உரையாடல் குறித்து விவாதம்


அக். 28, 2009 திருப்பீட சமூகத் தொடர்புத் துறை இவ்வாரம் ரோமையில் கூடி திருச்சபை கணணி கலாச்சாரத்துடன் ("digital culture") கொள்ள வேண்டிய உரையாடல் குறித்து விவாதித்து வருகிறது. வரும் விழாயன் வரை நடைபெறும் திருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் நிறை அமர்வுக்  கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் Claudio Maria Celli இந்த கணணி கலாச்சாரத்துடன் மேற்கொள்ளும் உரையாடலைத் திருச்சபை புதுவித கண்ணோட்டத்துடன் அணுகவேண்டும் எனக் கூறினார்.தொடர்பு சாதனம் குறித்து "Aetatis Novae" என்ற திருச்சபையின் படிப்பினைகள் 1992ஆம் ஆண்டு வெளியானதைச் சுட்டிக் காட்டிய பேராயர் செல்லி, அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள தொடர்பு சாதன மாற்றங்கள் தொடர்புகளின் இயல்பையே மாற்றியுள்ளதால், இக்காலத்திற்கேற்ப தொடர்பு சாதனம் குறித்த திருச்சபையின் படிப்பினைகளும் அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த விவாதங்கள் நடைபெறுவதாகக் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.