2009-10-27 16:26:20

வியட்நாமில், முதன் முறையாக, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு


அக். 27, 2009 கல்விப் பணியில் திருச்சபையின் இடம் மறுக்கப்பட்டுள்ள வியட்நாமில், முதன் முறையாக, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு, “கத்தோலிக்கப் பள்ளிகளில் கல்வி” என்ற தலைப்பில் ஒன்று கூடி விவாதித்துள்ளது. வியட்நாம் அரசின் அனுமதியுடன், அந்நாட்டின் ஹோ சி மின் நகரில் கடந்த வியாழன் முதல் இத்திங்கள் வரை இடம் பெற்ற இக்கூட்டத்தில், வியட்நாம், தாய்லாந்து, தாய்வான், இலங்கை, தென் கொரியா, பிலிப்பின்ஸ், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சார்ந்த கர்தினால்கள், ஆயர்கள் என 40 பேர் கலந்து கொண்டனர். கல்விப் பணியில் திருச்சபை ஈடுபடுவதைத் தடை செய்துள்ள கம்யூனிச வியட்நாமில் இடம் பெற்ற இக்கூட்டத்தில், "இன்றைய வியட்நாமின் சமூகப் பொருளாதாரச் சூழலில் திவ்ய நற்கருணையின் மறையுண்மையை வாழ கிறிஸ்தவர்களுக்கு கற்பித்தல்" என்பது குறித்து உரையாற்றினார் அந்நாட்டு கர்தினால் ஜான் பாப்டிஸ்ட் ஃபாம் மின் மான்.







All the contents on this site are copyrighted ©.