2009-10-27 16:25:45

புனித பூமியின் அமைதிக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளதாக அறிவித்தார் கர்தினால் ஜான் ஃபோலி


அக். 27, 2009 புனித பூமியின் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக கடந்த பத்தாண்டுகளில் ஐந்து கோடி டாலர்களுக்கும் மேல் உதவியதன் மூலம் அப்பகுதியின் அமைதிக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளதாக அறிவித்தார் கர்தினால் ஜான் ஃபோலி.
புனித பூமியில் பணி புரியும் புனித கல்லறை சேனை அமைப்பின் தலைவரான கர்தினால் ஃபோலி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் கருத்தரங்கில் எருசலேமின் முக்கியத்துவம் மற்றும் இச்சேனை அமைப்பின் பங்களிப்பு குறித்து உரையாற்றுகையில், மதவேறுபாடின்றி அனைவருக்கும் சேவையாற்றும் எருசலேம் லத்தீன் ரீதியின் பள்ளிகள் மற்றும் மருத்துவ மனைகளின் நிதித் தேவைகளின் மூன்றில் இருபகுதியை இவ்வமைப்பே வழங்கி வருவதாகவும் கூறினார். எருசலேமையும், பெத்லகேமையும் பிரிக்கும் சுவர் குறித்து கவலையை வெளியிட்ட கர்தினால், வேலைவாய்ப்பின்மைகளும், கல்வி வசதியின்மைகளும் பெருகி வருவது குறித்தும் எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.