2009-10-26 16:22:57

பசியால் வாடுவோரின் எண்ணிக்கையில் மேலும் 20 கோடி பேர் அதிகரித்துள்ளதாக .நா.வின் உலக உணவு நிறுவனம் கவலை


அக். 26, 2009 கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் பசியால் வாடுவோரின் மொத்த எண்ணிக்கையில் மேலும் 20 கோடி பேர் அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் உலக உணவு நிறுவனம் கவலையை வெளியிட்டுள்ளது.

உலகில் ஆறுக்கு ஒருவர் அன்றாட உணவுத் தேவைகளை நிறைவு செய்வது குறித்த நிச்சயமின்றியே காலையில் கண் விழிக்கிறார்கள் என்றும், 102 கோடி பேர் இவ்வுலகில் பசியால் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார் WFP அமைப்பின் நிர்வாக இயக்குனர் Josette Sheeran .
உலகின் பணக்கார நாடுகளில் பொருட்களின் விலை, பொருளாதார நெருக்கடி காரணமாகக் குறைந்துள்ள போதிலும், ஏழை நாடுகளில் 80 விழுக்காட்டுப் பொருட்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளதாகவும் கவலையை வெளியிட்டார் Sheeran .







All the contents on this site are copyrighted ©.