2009-10-24 17:41:22

சமூகத் தொடர்புத் துறைகளில், குழந்தைகளின் உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் SIGNIS அழைப்பு


அக். 24, 2009 சமூகத் தொடர்புத் துறைகளில், குழந்தைகளின் உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் மற்றும் அவர்கள் குரலுக்கு செவிசாய்க்கப்பட வேண்டும். என்பதை உறுதி செய்ய வேண்டியது கத்தோலிக்க சமூகத் தொடர்பாளர்களின் கடமையாகிறதென அழைப்பு விடுத்துள்ளது SIGNIS அமைப்பு.
"அமைதி கலாச்சாரம், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நாளைய வாக்குறுதி ஆகியவை களுக்கான சமூகத்தொடர்பு அமைப்பு" என்ற தலைப்பில், தாய்லாந்தில் உலக மாநாட்டை நடத்திய, சர்வதேச கத்தோலிக்க சமூகத் தொடர்பாளர்களின் அமைப்பான SIGNIS வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகத்தை மாற்றி வரும் சமூகத்தொடர்பு சாதனங்களின் வலிமையின் பின்னணியில் குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.குழந்தைகளின் உரிமைகள் மதிக்கப்படுவதையும், அவர்களின் குரலுக்கு செவிசாய்க்கப்பட வேண்டியதையும் உறுதி செய்ய வேண்டியது கத்தோலிக்க சமூகத் தொடர்பாளர்களின் கடமை என்றார் SIGNIS அமைப்பின் தலைவர் அகஸ்டின் லூர்துசாமி.







All the contents on this site are copyrighted ©.