2009-10-24 17:40:32

கத்தோலிக்கர்களுக்கும், ஆர்தொடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம்


அக். 24, 2009 "கிறிஸ்தவ ஐக்கியத்தில் கத்தோலிக்கத்தின் தலைவரான ரோமை ஆயரின் இடம்" என்ற தலைப்பில் கத்தோலிக்கர்களுக்கும், ஆர்தொடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும் இடையே சைப்ரஸில் நடைபெற்ற கூட்டத்தின் தொடர்ச்சி, வரும் ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரிய தலைநகரில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 16 முதல் 23 வரை கத்தோலிக்கர்களுக்கும், ஆர்தொடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும் இடையே சைப்ரஸில் நடைபெற்ற கூட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் 20 பிரதிநிதிகளும், ரஷ்யன்  ஆர்தொடாக்ஸ் கிறிஸ்தவ சபை உட்பட்ட 13  ஆர்தொடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, கிறிஸ்தவர்கள் 1054 ஆம் ஆண்டு பிளவுபடுவதற்கு முன்னர் திருச்சபையில் திருத்தந்தையின் இடம் குறித்து விவாதித்தனர். கிறீஸ்தவ சபைகளுக்கிடையேயான ஐக்கியத்திற்கான பேச்சுவார்த்தைகளில் திருச்சபைக்குள் அதிகாரப் பகிர்வு குறித்த கலந்துரையாடல்கள் தற்போது முக்கிய இடம் வகித்து வருகின்றன.







All the contents on this site are copyrighted ©.