2009-10-24 17:28:13

.நா. பொது அவைக் கூட்டத்தில் உரையாற்றினார் பேராயர் செலேஸ்தினோ


அக். 24, 2009 உலகின் மக்கள் தொகை அதிகரித்துவரும் இன்றைய காலக் கட்டத்தில், வேளாண்மை குறித்த புதிய அணுகு முறைகளும், புதுபிக்கப்பட்ட அற்பணமும் தேவைப்படுவதாக ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் உரையாற்றினார் பேராயர் செலேஸ்தினோ. உலகில் உணவு உற்பத்தி அனைவருக்கும் போதுமானதாக இருக்கின்ற போதிலும், மக்கள் பெருக்கம் காரணமான உணவு உற்பத்தியின் தேவையானது, உணவு உற்பத்தியையும் தாண்டி செல்வதாக அறிவித்த ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் மிலியோரே, இன்றைய உலகில் முதன்முறையாக போதிய சத்துணவின்மையால் வாடுவோரின் எண்ணிக்கை 100 கொடியையும் தாண்டியுள்ளது என்றார். ஆப்பிரிக்காவின் வளமையான நிலங்களுள் 10 விழுக்காடே பயன்படுத்தப்படுவதை சுட்டிக் காட்டிய பேராயர், சரியான திட்டங்கள் வகுக்கப்படுவதன் மூலம் வேளாண்மை உற்பத்திகள் அதிகரிக்கப்பட முடியும் என்றார்.







All the contents on this site are copyrighted ©.