2009-10-23 18:08:01

ஆங்கிலிக்கன் சபையினரைக் கத்தோலிக்கத் திருச்சபையில் ஏற்றுக் கொள்ளும் முயற்சிகள் வரவேற்கப்படும் ஒரு செய்தி அமெரிக்கா, கனடா


அக். 23, 2009 ஆங்கிலிக்கன் சபையினரை மீண்டும் கத்தோலிக்கத் திருச்சபையில் ஏற்றுக் கொள்ளும் முயற்சிகள் ஆரம்பமாகி இருப்பது ஆர்வத்துடன் வரவேற்கப்படும் ஒரு செய்தி என்று அமெரிக்காவின் சான் அன்தொனியோவில் உள்ள பங்குத் தந்தை அருட்திரு கிறிஸ்டோபர் பில்லிஸ் (Christopher Phillis) தெரிவித்தார். எபிஸ்கோபல் குருவாயிருந்து, பின்னர் கத்தோலிக்க குருவாக மாறிய அருட்தந்தை பில்லிஸ் வத்திக்கானிலிருந்து அதிகாரப்பூர்வமான, தெளிவானத் தகவல்களை எதிர்பார்த்து, தன் பங்கில் குறைந்தது 500 குடும்பங்கள் காத்திருக்கின்றன என்று கூறினார். டெக்சாஸ், பாஸ்டன், பீனிக்ஸ் ஆகிய நகரங்களிலும் இதுபோன்ற எதிபார்ப்புடன் குடும்பங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆங்கிலிக்கன் சபையிலிருந்து தனி நபர்களும், குழுக்களும் வத்திக்கானுக்குத் தொடர்ந்து அனுப்பி வந்த விண்ணப்பங்களுக்குப் பதில் கூறும் வகையில் வத்திக்கானின் இந்த  அறிவிப்பு வந்துள்ளது எனவும், கிறிஸ்தவ ஒற்றுமையை வளர்ப்பதில் வத்திக்கான் தொடர்ந்து காட்டி வரும் ஆர்வத்தை இது உறுதிபடுத்துகிறது எனவும் விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் வில்லியம் லெவாதா கூறினார். கனடாவில் Quebec நகரின் கர்தினால் மார்க் ஊலே கனடாவின் Anglican CatholicChurch ஆயர் பீட்டர் வில்கின்சன் ஆகியோர் வத்திக்கானின் இந்த ஒருமைப்படுத்தும் முயற்சியைப் பெரிதும் பாராட்டியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.