2009-10-22 13:23:38

லண்டனில் நிதித்துறையின் தலைவர்கள் பலரும் கூடி திருத்தந்தையின் சுற்றுமடல் குறித்து விவாதித்தனர்


அக். 22, 2009 லண்டனில் Schroders வங்கியின் தலைமையகத்தில் இப்புதனன்று நிதித்துறைத் தலைவர்கள் பலரும் கூடி, திருத்தந்தை 16 ம் பெனெடிக்ட் அண்மையில் வெளியிட்ட "Caritas in Veritate " என்ற சுற்றுமடல் இன்றைய காலக் கட்டத்தில் எவ்வளவு தூரம் அர்த்தமுள்ளது என்பதைக் குறித்து விவாதித்தனர்.
Westminster பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த விவாதம் சிறப்பான முறையில் நடைபெற வேண்டுமென திருத்தந்தை தன் அசீர் அடங்கிய செய்தி யொன்றை பேராயருக்கு அனுப்பியுள்ளார்.
நிதித்துறை தலைவர்கள் இது போன்ற விவாதங்களில் ஈடுபடுவது தனக்கு மன நிறைவு அளிக்கிறதென்றும், இந்த விவாதங்களில் முழு மனித மேம்பாடு குறித்து இன்னும் ஆழமான விவாதங்கள் நடைபெறுவதைத் தான் விரும்புவதாகவும் திருத்தந்தையின் இச்செய்தி கூறுகிறதென திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிஸியோ பெர்தொனே கூறினார். Schroders வங்கியின் தலைவர், Goldman Sachs உப தலைவர், Barclays வங்கித் தலைவர் ஆகியோருடன் இன்னும் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்று செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.